விஷால்- தீபா வரிசையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை


விஷால்- தீபா  வரிசையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய சுயேட்சை வேட்பாளர்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2017 1:51 PM IST (Updated: 4 Dec 2017 4:04 PM IST)
t-max-icont-min-icon

விஐபி என்ற பாகுபாடு காட்டாமல் விஷால், தீபாவை வரிசையில் நின்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.


சென்னை, 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி. மு.க., தி.மு.க., டி.டி.வி. தினகரன் அணி, பா.ஜ.க., நடிகர் விஷால், நாம் தமிழர் கட்சி, ஜெ.தீபா ஆகியோருக்கு இடையே  7 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை வரை 30 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். கடைசி நாளான இன்றும் சிலர் மனுதாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவரும் ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர். பிரதான கட்சிகளில் பாரதீய ஜனதா கட்சியின் வேட்பாளர் கரு.நாகராஜன் இன்று மனுதாக்கல் செய்தார்.

சுயேட்சை வேட்பாளர்களாக களம் இறங்கும் நடிகர் விஷால், ஜெ.தீபா ஆகியோரும் இன்று தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். ஆர்.கே.நகர் தொகுதியை முன் மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்ற  கோஷத்துடன் நடிகர் விஷால் களம் இறங்கியுள்ளார்.

இந்த நிலையில் இன்று  3 மணியுடன் மனுதாக்கல் செய்ய அவகாசம் முடியும் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய 42  சுயேட்சை வேட்பாளர்கள் அங்கு குவிந்து உள்ளனர்.  விஐபி  என்று பாகுபாடு இல்லாமல்   விஷால் , தீபா ஆகியோரும்  வரிசையில் நின்று வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். நடிகர் விஷால் மனு தாக்கல் செய்ய வரும் போது வரிசை படியே அனுமதிக்க வேண்டும்  என தேர்தல் அலுவலர் அலுவலகம் முன்பு சுயேட்சை வேட்பாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story