நடை, உடை, பாவனைகளை மாற்றியது ஏன்? தீபா விளக்கம்
நடை, உடை, பாவனைகளை மாற்றியது ஏன்? என்பது தொடர்பாக தீபா விளக்கம் தெரிவித்து உள்ளார்.
சென்னை,
ஆர்.கே.நகர் சட்ட சபை தொகுதியின் உறுப்பினராக இருந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மரணம் அடைந்ததால், அந்த தொகுதிக்கு வருகிற 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிக்கையை தேர்தல் கமிஷன் கடந்த மாதம் 27-ந்தேதி வெளியிட்டது. அன்றே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன், தி.மு.க. வேட்பாளர் மருதுகணேஷ், சுயேச்சையாக டி.டி.வி. தினகரன், ஜெ.தீபா, நடிகர் விஷால் உள்ளிட்டோர் களம் இறங்கி உள்ளனர்.
தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் வேட்புமனுவை ஜெ. தீபா இன்று தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணபலத்தையும், அதிகார பலத்தையும் பயன்படுத்துபவர்களே எனது பிரதான எதிரிகள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகதான் எனக்கு கடும் போட்டி. தினகரனை போட்டியாக நினைக்கவில்லை என கூறினார்.
அவரிடம் நடை, உடை, பாவனைகளை மாற்றியது ஏன்? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
முன்னர் வந்த தீபாவிற்கும், இப்போதைய தீபாவிற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது, அவருடைய நடை, உடை, பாவனைகள் மாறி உள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த தீபா எனக்கு எந்த ‘டிரஸ்-கோடும்’ கிடையாது, யாரையும் காப்பி அடிப்பதும் கிடையாது என்றார். இன்னொரு ஜெயலலிதாவாக முயற்சி செய்கிறீர்களா? என்ற கேள்விக்கு, அதான் ஏற்கனவே நான் யாரையும் காப்பி அடிக்கவில்லை என்று கூறிவிட்டேன், அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. எனக்கு மனதில் பிடித்த உடையை அணிவேன், அவ்வளவுதான் என்றார்.
Related Tags :
Next Story