உப்புச்சத்து குறைவால் பாதிப்பு கங்கை அமரன் கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி


உப்புச்சத்து குறைவால் பாதிப்பு கங்கை அமரன் கோவை ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 5 Dec 2017 2:45 AM IST (Updated: 5 Dec 2017 1:40 AM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளர் கங்கை அமரன் உப்புச்சத்து குறைவு காரணமாக கோவை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் கடந்த வாரம் கோவை வந்தார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 30-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் உப்புச்சத்து குறைபாடு இருப்பதை கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு சிறிய அளவில் கழுத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் உடல்நலம் தேறி வருகிறார்.

அவரை இசையமைப்பாளார் தேவா சந்தித்து உடல்நலம் விசாரித்தார். ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், ‘ கங்கை அமரன் தற்போது வேகமாக குணமடைந்து வருகிறார். விரைவில் அவர் வீடு திரும்புவார்’ என்றனர். 

Next Story