நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு


நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு தேர்தல் நடத்தும் அதிகாரி அதிகாரப்பூர்வ அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2017 11:48 PM IST (Updated: 5 Dec 2017 11:51 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21–ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுகிறார். நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். விஷால் வேட்புமனுவில் உறுதிமொழி, கணக்கு விவரங்கள் முறையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது இதனால் நடிகர் விஷாலின் வேட்புமனுவை ஏற்க அ.தி.மு.கவும் திமுகவும் எதிர்ப்பு தெரிவித்தன. இதைத் தொடர்ந்து அவரது மனு மீதான பரிசீலனையில் இழுபறி நீடித்தது. இதை தொடர்ந்து மாலை நடிகர் விஷாலின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமி நிராகரித்தார். 

இதனால் நடிகர் விஷால் தன்னுடைய ஆதரவாளர்களுடன் சேர்ந்து வேட்புமனு நிராகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

இதனால் வேட்புமனு தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்குள், நடிகர் விஷால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

பின்பு நடிகர் விஷாலில் வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

இதற்கிடையே நடிகர் விஷாலின் வேட்புமனுவை முன்மொழிந்த கடிதத்தில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் இன்றி கையெழுத்திடப்பட்ட புகாரின் அடிப்படையில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதாக ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Next Story