நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை-விஷால்


நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை-விஷால்
x
தினத்தந்தி 6 Dec 2017 12:53 PM IST (Updated: 6 Dec 2017 12:52 PM IST)
t-max-icont-min-icon

நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை என நடிகர் விஷால் கூறி உள்ளார்.

சென்னை

வேட்புமனு ஏற்கப்பட்டது எனக் கூறிய நிலையில் நிராகரிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியன் என்ற அடிப்படையிலேயே நான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  திட்டமிட்டே எனது  வேட்புமனுவை நிராகரித்து உள்ளனர். வேட்புமனு ஏற்கப்பட்டது என கூறிய நிலையில் எனது மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது. 

வேட்பு மனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டபட்டதாலேயே  அவர்கள் நிலைப்பாட்டை மாற்றி உள்ளனர்.  இந்தியன் என்ற அடிப்படையிலேயே நான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முன்வந்தேன்.

சினிமாவில்  வரும் காட்சிகளை போல் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மனு ஏற்கப்பட்டதாக அறிவித்த பின், நிராகரித்தது ஏன்?  

வேட்பு மனு நிராகரிப்பு குறித்து, அதிகாரி உரிய பதிலளிக்க வேண்டும். எதிர்காலத்தில் எச்சரிக்கை உணர்வுடன்  இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

எனக்கு என்ன நேர்ந்தது என்பதை மக்கள் பார்த்து கொண்டு இருக்கிறார்கள். நான் அரசியல் கட்சி தொடங்குவேனா என்பதை மக்களே முடிவு செய்வார்கள்.

நான் தேர்தலில் போட்டியிடுவதற்கு பின்னணியில் தினகரனோ, கமல்ஹாசனோ, திமுகவோ இல்லை. ஜாதி அடிப்படையில் தேர்தலில் போட்டியிடவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story