ஆர்.கே.நகர் தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு ஜனாதிபதி -பிரதமருக்கு நடிகர் விஷால் புகார்


ஆர்.கே.நகர் தேர்தல் வேட்பு மனு நிராகரிப்பு ஜனாதிபதி -பிரதமருக்கு நடிகர் விஷால் புகார்
x
தினத்தந்தி 6 Dec 2017 12:57 PM IST (Updated: 6 Dec 2017 12:57 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது குறித்து ஜனாதிபதி -பிரதமருக்கு நடிகர் விஷால் புகார் அளித்து உள்ளார்.

சென்னை

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிட்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடைபெற்றது. அப்போது விஷாலை முன்மொழிந்தவர்களின் பெயர்கள் தவறாக உள்ளதால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் அலுவலகம் முன்பு விஷால் தனது ஆதரவாளர்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

 தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமே இல்லை என்றும், தன்னை முன்மொழிந்த நபர்கள் அதிமுகவினரால் மிரட்டப்பட்டதற்கு ஆதாரம் இருக்கிறது என்றும் கூறினார். இதனையடுத்து, மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் தான் பேசிய ஆடியோ ஆதாரத்தையும் விஷால் வெளியிட்டார். இதனால் வேட்புமனு விவகாரத்தில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என முன்னதாகவே முடிவு செய்துவிட்டு வேட்புமனு நிராகரிப்பட்டிருப்பதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டினார். சுயேச்சையாக போட்டியிடும் இளைஞர் ஒருவரை வெற்றி பெற வைப்பேன் என அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில்  ஆர்.கே. நகர் தேர்தலில் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்கும்  என நம்புகிறேன் என டுட்விட்டரில் குடியரசுத் தலைவர் மாளிகை , பிரதமரின் கணக்கை டேக் செய்து நடிகர் விஷால் கருத்து தெரிவித்து உள்ளார்.

Next Story