தமிழகத்திற்கு புயல் மற்றும் மழை பாதிப்பு இல்லை- சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்திற்கு புயல் மற்றும் மழை பாதிப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை
சென்னை வானிலை மையம் இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
நேற்று தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று அதே பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது இது மசூலிபட்டினத்திற்கு தென்கிழக்கே 1160 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. வரும் டிச. 8 வரையிலான காலகட்டத்தில் இது வட வட மேற்கு திசையில் ஆந்திர கரையை நோக்கி நகரும். மீனவர்கள் தமிழகம் மீனவர்கள் அடுத்து 3 நாட்களுக்கு (டிச.6,7 8) தேதிகளில் வங்க கடலில் ஆழ்கடல் பகுதிகளுக்கும், வட தமிழகம் தெற்கு ஆந்திர கடல் ஒட்டிய பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுச்சேரியில் ஒரிரு மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நெல்லை ஆயக்குடியில் 7 செ.மீ., மழையும், ராஜபாளையம், தென்காசி,அறந்தாங்கியில் தலா 1 செ.மீ., மழையும் பதிவாகயுள்ளது. லேசான மழை அடுத்த 2 நாட்கள் 6, 7 தேதி தமிழகம் புதுவையில் ஒரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை சில பகுதிகளில் ஒரிரு முறை லேசான மழை வாய்ப்பு உள்ளது. என கூறினார்.
Related Tags :
Next Story