முறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள்: முதல் அமைச்சர் பழனிசாமி


முறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள்: முதல் அமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 6 Dec 2017 6:43 PM IST (Updated: 6 Dec 2017 6:43 PM IST)
t-max-icont-min-icon

முறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள் என்று முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது

'ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, இந்தியாவே உற்று பார்க்கிறது. உயிரை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும்'
* ஆட்சியிலும், கட்சியிலும் பல சோதனைகள், இதனை சந்தித்த வலுவான ஒரே இயக்கம் அதிமுக 
* தேர்தல் ஆணைய விதிமுறைகளை அதிமுகவினர் பின்பற்ற வேண்டும்
* முறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள்
*ஆர்கே நகரில் நாளை மாலை முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம்” என்றார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் பேசுகையில், “ ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. மதுசூதனன் பெறப்போகும் வெற்றி வரலாற்று வெற்றியாக அமையும். ஆர்.கே.நகர் தேர்தல் நமக்கு சத்ய சோதனை” என்று தெரிவித்தார். 



Next Story