”விஷாலுக்கு, குஷ்பு வாழ்த்து ”ஜாக்கிரதையாக இருக்க சு.திருநாவுக்கரசர் அறிவுரை


”விஷாலுக்கு, குஷ்பு வாழ்த்து ”ஜாக்கிரதையாக இருக்க  சு.திருநாவுக்கரசர் அறிவுரை
x
தினத்தந்தி 7 Dec 2017 12:15 AM IST (Updated: 6 Dec 2017 10:53 PM IST)
t-max-icont-min-icon

விஷாலுக்கு, குஷ்பு வாழ்த்து சொன்னது சரி இல்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சட்டமேதை அம்பேத்கரின் 61–வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்திபவனில், அம்பேத்கர் உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி  நடந்தது.

நிகழ்ச்சிக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தலைமை தாங்கினார். 

நிகழ்ச்சியின்போது, சு.திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதே?

பதில்:– நடிகர் விஷால் தன்னுடைய வேட்புமனு நிராகரிப்பட்டதற்கு குறித்து வெளியிட்ட ‘வாட்ஸ்–அப்’ உரையாடல் பற்றி முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். ஆட்சி, அதிகாரம், காவல்துறை ஆகியவற்றின் மூலம் விஷாலுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்தால், அது கண்டனத்துக்குரியது.

கேள்வி:– விஷாலுக்கு வாழ்த்து சொன்ன குஷ்புக்கு, காங்கிரஸ் மாவட்ட தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் கண்டனம் தெரிவித்துள்ளாரே?

பதில்:– சுயேச்சையாக போட்டியிட போவதாக அறிவித்த விஷாலுக்கு, குஷ்பு வாழ்த்து சொன்னது சரியானது இல்லை. சினிமா வேறு, அரசியல் வேறு. சினிமா தொடர்புடைய தேர்தலில் போட்டியிட்டால் சக நடிகை என்ற அடிப்படையில் வாழ்த்து சொல்லலாம். சக அணிக்கு ஆதரவாக கூட செயல்படலாம். எனவே காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கருத்துக்களை சொல்லும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story