லோக் அயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக லோக் அயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான ஒரே வழி லோக் அயுக்தா அமைப்பை உருவாக்குவதும், சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றி செயல்படுத்துவதும் தான். லோக் அயுக்தா அமைப்பும், சேவை பெறும் உரிமை சட்டமும் இந்தியாவில் 21 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளன.
தன்னாட்சி அதிகாரம் பெற்ற லோக் அயுக்தா அமைப்பை சிறப்பு சட்டத்தின் மூலம் உருவாக்கி முதல்-அமைச்சர், அமைச்சர்களை அதன் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அதிகாரிகள் முதல் முதல்-அமைச்சர் வரை யார் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டாலும் அதை 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு சொல்வதன் மூலம் ஊழலை கட்டுப்படுத்த முடியும்.
ஆனால், ஊழல் ஒழிந்து விடக்கூடாது என்று நினைக்கும் தமிழகத்தின் 2 திராவிட கட்சிகளும் இதனை அமல்படுத்துவதற்கு தடையாக உள்ளன. லோக் அயுக்தா, சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்தில் கொண்டுவரவேண்டும் என்று கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ம.க. வலியுறுத்தி வருகின்றபோதிலும், அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. ஊழலை ஒழிப்பதில் அவர்களுக்கு விருப்பமும் இல்லை.
ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 20 மாதங்களாகியும் லோக் அயுக்தா அமைப்பை நிறைவேற்ற எந்த முயற்சியும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற அக்கறை தமிழக ஆட்சியாளர்களுக்கு இருந்தால் லோக் அயுக்தா சட்ட முன்வடிவையும், பொதுச்சேவை பெறும் உரிமை சட்ட முன்வடிவையும் அடுத்த மாதம் தொடங்க இருக்கும் சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story