மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் தர்ணா போராட்டம்


மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திடீர் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2017 1:29 AM IST (Updated: 7 Dec 2017 1:29 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் ‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

திருப்பதிசாரம் என்ற இடத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அரசு பள்ளி முகாமுக்கு சென்றார். அப்போது அங்கு குறைவான மக்களே இருந்தனர்.

இன்று (வியாழக்கிழமை) பள்ளிக்கூடம் திறக்கப்பட இருப்பதால் பள்ளியில் தங்க வைக்கப்பட்டு இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், முகாமில் உள்ளவர்களுக்கு நிவாரண பொருட்கள் உள்ளிட்ட வசதிகள் செய்துதரப்படவில்லை என்றும் தெரிகிறது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே முகாமுக்கு வந்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். ஆனால் அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால் அதிகாரிகளை கண்டித்து பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென பள்ளிக்கூட வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி வந்ததும் தர்ணாவை கைவிட்டு விட்டு, மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கும்படி வலியுறுத்தினார்.

Next Story