ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் டாக்டர் பாலாஜி


ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் டாக்டர் பாலாஜி
x
தினத்தந்தி 7 Dec 2017 3:01 PM IST (Updated: 7 Dec 2017 5:18 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி டாக்டர் பாலாஜி விளக்கமளித்தார்.

சென்னை

சென்னை கலசமஹாலில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் மருத்துவர் பாலாஜி, அரசு மருத்துவமனை மருத்துவர் தர்மராஜனும் விசாரணைக்காக ஆஜரானார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக  அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி ஆஜரானார். ஜெயலலிதா கைரேகை தொடர்பாக டாக்டர் சரவணன் அளித்த புகாரின் அடிப்படையில் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் விளக்கமளிக்க விசாரணை கமிஷன் முன்பு டாக்டர் பாலாஜி மற்றும்  டாக்டர்  தர்மராஜ் ஆஜரானார்கள். 

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார் மருத்துவர் பாலாஜி. அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது குறித்து மருத்துவர்களின் விளக்கம்  மற்றும்  ஜெயலலிதாவுக்கு தரப்பட்ட சிகிச்சை, உணவு மற்றும் சந்திப்பு ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

இதுவரை ஜெயலலிதா மரணம் தொடர்பாக 6 அரசு மருத்துவர்களிடம் விசாரிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து டாக்டர் பாலாஜி கூறியதாவது:-

ஆணையத் தலைவர் ஆறுமுகசாமியின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளேன், சம்பந்தப்பட்ட ஆதாரங்களும் வழங்கப்பட்டுள்ளது .  ஜெயலலிதா மரணம் தொடர்பாக டிச.27-ம் தேதி மீண்டும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக உள்ளேன்.

ஜெயலலிதாவுக்கு நான் சிகிச்சை அளிக்கவில்லை; லண்டன், எய்ம்ஸ் மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்தனர். தொடக்கத்தில் அவர் இட்லி எல்லாம் சாப்பிடவில்லை; பல நாட்கள் திரவ உணவு மட்டுமே எடுத்துக்கொண்டார்.ஜெயலலிதாவுடன் இறுதிவரை சசிகலா இருந்தார் .

Next Story