குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் பிரதமருக்கு முதல்-அமைச்சர் கடிதம்
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.
சென்னை,
இது குறித்து பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். புயல் பாதித்த பகுதிகளில் இயல்பு நிலை திரும்ப போதுமான நிதியுதவி வழங்க வேண்டும்.
ஓகி புயலால் குமரி மாவட்டம் மின் கட்டமைப்பு, விவசாயம், சாலை போக்குவரத்து போன்றவை பாதிக்கப்பட்டுள்ளது. அரேபியா, குஜராத், மாலத்தீவு பகுதிகளில் காணாமல் போன தமிழக மீனவர்களை தேடும் பணியை தொடர வேண்டும். இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story