காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தில் சிக்கிய லாரி டிரைவர் உயிர் தப்பினார்
கழுகுமலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைமட்ட பாலத்தில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சிக்கிக்கொண்டது.
கழுகுமலை
கழுகுமலையில், காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைமட்ட பாலத்தில் சிமெண்டு மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சிக்கிக்கொண்டது. அந்த லாரியில் இருந்து டிரைவர் கீழே குதித்து தண்ணீரில் நீந்தி உயிர் தப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை- கோவில்பட்டி மெயின் ரோடு குமாரபுரம் பஸ் நிறுத்தத்தில் உப்போடை பாலம் புதிதாக அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு ஓடையின் குறுக்கே ராட்சத குழாய்கள் பதித்து, தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் வழியாக வாகனங்கள் சென்று வந்தன.
நேற்று அதிகாலை பெய்த பலத்த மழையால், குமாரபுரம் உப்போடை தரைமட்ட பாலத்தை மூழ்கடித்தவாறு காட்டாற்று வெள்ளம் சென்றது. அப்போது கோவில்பட்டியில் இருந்து கழுகுமலைக்கு சிமெண்டு மூட்டைகள் ஏற்றிய லாரி தரைமட்ட பாலத்தில் சென்று கொண்டிருந்தது.
அந்த பாலத்தின் நடுவில் சென்றபோது திடீரென லாரி பழுதாகி நின்றது. உடனே லாரி டிரைவரான தென்காசி ஊர் மேலழகியான் பகுதியை சேர்ந்த கோபால் (வயது 61), லாரியில் இருந்து கீழே இறங்கி சென்று லாரியில் ஏற்பட்டு இருந்த சிறிய பழுதை சரிசெய்து கொண்டு இருந்தார்.
அப்போது தரைமட்ட பாலத்தின் மீது சுமார் ஒரு அடி உயரத்தில் தண்ணீர் சென்று கொண்டிருந்தது. இதனால் அவர் மீண்டும் லாரியில் ஏறி லாரியை ஓட்ட முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் தரைமட்ட பாலத்துக்கும், சாலைக்கும் இடையில் லாரி சிக்கிக்கொண்டது. உடனே லாரியில் இருந்து டிரைவர் கீழே குதித்து தண்ணீரில் நீந்தி கரைக்கு சென்று உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கழுகுமலை போலீசார், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, சாலையின் இருபுறமும் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். பின்னர், அந்த லாரியை மீட்கும் பணி நடைபெற்றது.

Related Tags :
Next Story