விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதத்துக்கு நீட்டிப்பு?
ஆணையம் 6 மாதம் கால அவகாசம் கோரிய போதும் தமிழக அரசு மேலும் 3 மாதம் கால அவகாசம் அளிக்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை கடந்த செப்டம்பர் மாதம் 25-ந்தேதி அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆணையம் 3 மாதத்துக்குள் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 24-ந்தேதியோடு 3 மாத அவகாசம் முடிவடைகிறது. ஆனால், விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது. மீதமுள்ள 2 வாரத்துக்குள் விசாரணையை முடிக்க இயலாது.
எனவே, விசாரணை ஆணையம் அறிக்கையை தாக்கல் செய்ய மேலும் 6 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
ஆணையம் 6 மாதம் கால அவகாசம் கோரிய போதும் தமிழக அரசு மேலும் 3 மாதம் கால அவகாசம் அளிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலேயே அரசு மருத்துவர் பாலாஜி 27-ந்தேதி ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Related Tags :
Next Story