இந்துக்களின் புனித கோவில்களை இடிப்போம் என்று கூறுவதா? திருமாவளவனுக்கு ராம.கோபாலன் கண்டனம்


இந்துக்களின் புனித கோவில்களை இடிப்போம் என்று கூறுவதா? திருமாவளவனுக்கு ராம.கோபாலன் கண்டனம்
x
தினத்தந்தி 9 Dec 2017 12:15 AM IST (Updated: 8 Dec 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

இந்துக்களின் புனித கோவில்களை இடிப்போம் என்று கூறுவதா? என திருமாவளவனுக்கு ராம.கோபாலன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, 


இந்து முன்னணி அமைப்பின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

6–12–2017 அன்று சென்னை பெரம்பூரில், விடுதலை சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு, இந்தியாவில் உள்ள இந்து கோவில்களை இடித்துவிட்டு, அங்கு புத்தவிகார்களை கட்ட வேண்டும் என்று பேசியிருப்பதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும், ஆன்மிகப் பெரியோர்களும், அமைப்புகளும் திருமாவளவன் கருத்தினைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், மத மோதல்களை உண்டாக்கும் உள்நோக்கத்துடனும், இந்து கோவில்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலும் பேசிய திருமாவளவன் மீது தமிழக அரசு, சட்டரீதியான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story