கோயம்புத்தூரில் உள்ள இந்திய அரசு அச்சகத்தை மூடக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்
கோயம்புத்தூரில் உள்ள இந்திய அரசு அச்சகத்தை மூடாமல், தொடர்ந்து நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 28-9-17 அன்று உங்களுக்கு நான் எழுதிய கடிதத்தையும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை மந்திரிக்கு கடந்த நவம்பர் 15-ந்தேதி எழுதிய கடிதத்தையும், இந்திய அரசு அச்சகங்களை (ஜி.ஐ.பி.) இணைப்பது அல்லது சீரமைப்பது குறித்தும், அதன் விளைவாக மற்ற அரசு அச்சகங்களை மூடுவது குறித்தும் மத்திய இணை மந்திரி எழுதிய பதில் கடிதங்களையும் நினைவுபடுத்துகிறேன்.
இந்திய அரசு அச்சகங்களை சீரமைப்பது அல்லது இணைப்பது மற்றும் அவற்றை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய மந்திரி சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்மூலம் கோயம்புத்தூரில் உள்ள ஜி.ஐ.பி. அச்சகம் மூடப்பட்டுவிடும். ஆனால் கோயம்புத்தூர் ஜி.ஐ.பி. அச்சகத்தில் அடுத்த 4 ஆண்டுகளுக்கான பணி உத்தரவு உள்ளது. அங்கு திறமைமிக்க நிபுணர்கள் பணியாற்றுகிறார்கள். அந்த அச்சகத்துக்கு 132.7 ஏக்கர் நிலமும் உள்ளது.
எனவே கர்நாடகா, கேரளாவில் உள்ள அரசு அச்சகங் களை கோயம்புத்தூர் ஜி.ஐ.பி. அச்சகத்துடன் இணைப்பதன் மூலம், இந்த அச்சகத்தை தென்னிந்தியாவுக்கான அச்சகமாக தொடர்ந்து நீடிக்கச் செய்ய முடியும்.
எனவே நீங்கள் தலையிட்டு, கோயம்புத்தூர் ஜி.ஐ.பி. அச்சகத்தை தொடர்ந்து நீடிக்கச் செய்வதற்கான அறிவுரையை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story