சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை வருகை
சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகை தருகிறார்.
சென்னை,
வானவில் பண்பாட்டு மையத்தின் 24-வது ஆண்டு விழாவையொட்டி, சென்னைக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) வருகை தருகிறார்.
பொற்றாமரை அமைப்பின் தலைவர் இல.கணேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம் ஆண்டு விழாவை ‘பாரதி பெருவிழா, தேசபக்தி பெருவிழாவாக’ இன்று (சனிக்கிழமை), நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுதினம் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை பாரதியாரின் வழித்தோன்றல்களான ராஜ்குமார் பாரதி, நிரஞ்சன் பாரதி ஆகியோர் இன்று தொடங்கி வைக்கின்றனர்.
விழாவின் முதல் நாளான இன்று மாலை 6 மணிக்கு சென்னை தியாகராயநகர் பத்மா சேஷாத்ரி பால பவன் வளாகத்தில் ‘பாரதி யார்?’ என்ற நாடகம் அரங்கேற்றப்பட உள்ளது. இதில் பாரதியாராக ரமணன் தோன்றுகிறார்.
மயிலாப்பூர் கிழக்கு மாடவீதியில் உள்ள பாரதிய வித்யா பவனில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். அந்த நிகழ்ச்சியில் மத்திய புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குனர் டி.ஆர்.கார்த்திகேயனுக்கு, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பாரதி விருது வழங்கி கவுரவிக்கிறார்.
அன்று பிற்பகல் 12 மணிக்கு பாரதியார் ரத்ன இசை நிகழ்ச்சியும், பிற்பகல் 2 மணிக்கு நூற்றுக்கணக்கான இளஞ்சிறார்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி, மாறுவேடப் போட்டியும், மாலை 5 மணிக்கு எம்.பி.எஸ். சென்னை இளைஞர் குழுவினரின் ‘பாரத சமுதாயம் வாழ்கவே’ என்ற நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
அதேபோல், மாலை 6 மணிக்கு நாரதகான சபா நாட்டியரங்கத்தின் நடன நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நாளை மறுதினம் மகாகவி பாரதி விருப்பப்பட்ட ஜதி பல்லக்கு ஊர்வலம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் இருந்து தொடங்கி பாரதியார் இல்லம் வந்தடையும்.
அன்று மாலை 7 மணிக்கு ‘புதுமைப்பெண்-ஒரு பரிணாம பார்வை’ என்ற தலைப்பில் விழா பேரூரை நடைபெற இருக்கிறது. இத்துடன் இந்த ஆண்டுக்கான தேசபக்தி பெருவிழா நிறைவடைகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story