தேர்தல் நடைமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு அறிவுரை; அதிகாரிகள் வழங்கினர்


தேர்தல் நடைமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு அறிவுரை; அதிகாரிகள் வழங்கினர்
x
தினத்தந்தி 9 Dec 2017 7:45 PM IST (Updated: 9 Dec 2017 7:25 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆர்.கே. நகர் வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

சென்னை,

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகத்தில்  அனைத்து கட்சி வேட்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் அல்கா ஸ்ரீவிஸ்வநாதன், செலவின பார்வையாளர் ஷில் ஆஷிஸ், தேர்தல் நடத்தும் அதிகாரி கே.வேலுச்சாமி, மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் மற்றும் தேர்தல் அதிகாரிகள், துணை தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள், பிரசாரம் செய்யும் வழிமுறைகள் குறித்து வேட்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.  தேர்தல் நடைமுறைகள் குறித்து ஆர்.கே. நகர் வேட்பாளர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இந்த கூட்டம் முடிந்தவுடன் மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

256 வாக்குச்சாவடி மையங்களிலும் புதிதாக பயன்படுத்தப்பட உள்ள ஒப்புகை வாக்குச்சீட்டு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த எந்திரத்தின் மூலம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் வாக்காளர்கள் நினைப்பது போன்று ஒப்புகைச்சீட்டு எதுவும் கையில் எடுத்து செல்ல முடியாது. எந்திரத்தின் உள்ளே அச்சிட்டப்பட்டு, அதன் உள்ளே விழுந்துவிடும். இதனை தேர்தல் அதிகாரிகளும் திறந்து பார்க்க முடியாது.

இதை திறந்தாலே வாக்கு எந்திரத்தை சேதப்படுத்தியதாக கருதப்படும். 256 மையங்களுக்கு, 360 வாக்குப்பதிவு எந்திரங்கள் வந்துள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவரிடம் ஒரு வேட்பாளர் தேர்தலில் எவ்வளவு தொகை செலவு செய்யலாம்? என்று நிருபர்கள் கேட்டதற்கு, ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் வரை செலவு செய்யலாம். யாருக்கும் பணம் கொடுக்க கூடாது. வங்கிகள் மூலமாக மொத்த வைப்புத்தொகை செலுத்தக்கூடாது. இதனை நாங்கள் தீவிரமாக கண்காணிக்கிறோம்.’ என்றார்.

 


Next Story