2–வது முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து? நடிகர் எஸ்.வி.சேகர், டுவிட்டரில் தகவல்


2–வது முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து? நடிகர் எஸ்.வி.சேகர், டுவிட்டரில் தகவல்
x
தினத்தந்தி 9 Dec 2017 10:30 PM IST (Updated: 9 Dec 2017 10:30 PM IST)
t-max-icont-min-icon

2–வது முறையாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து? என நடிகர் எஸ்.வி.சேகர், டுவிட்டரில் கூறியுள்ளார்.

சென்னை, 

நடிகரும், பாரதீய ஜனதா கட்சி பிரமுகருமான எஸ்.வி.சேகர் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் குறித்து டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘‘விரைவில் அறிவிப்பு எதிர்பார்க்கலாம். பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாததால், ஆர்.கே. நகர் தேர்தல் இரண்டாம் முறையாக ரத்து செய்யப்படுகிறது. 2 முறை தொடர்ந்து தேர்தல் நடத்த முடியாத சட்டம்–ஒழுங்கு கெட்ட சூழலில் தமிழக அரசு’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story