ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணையின் ‘ஷட்டர்’ உடைந்தது
ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணையின் ஷட்டர் உடைந்தது.
ஈரோடு,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்படும் தண்ணீர் பல பகுதிகளில் தேக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதற்காக சேலம் மாவட்டம் செக்கானூரில் முதல் கதவணையும் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டையில் 2-வது கதவணையும் உள்ளது.
இந்த 2-வது கதவணையில் சுமார் 30 அடிக்கு தண்ணீர் தேக்கப்பட்டு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 2 எந்திரங்கள் மூலம் தலா 15 மெகாவாட் மின்சாரம் தயார் ஆகிறது. மேட்டூர் அணையில் இருந்து 18 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே இந்த 30 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும்.
நெரிஞ்சிப்பேட்டை கதவணையில் மொத்தம் 18 ஷட்டர்கள் உள்ளன. இவை மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஏற்கனவே 3, 5-வது ஷட்டர்கள் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 1 மணி அளவில் அழுத்தம் காரணமாக 7-வது ‘ஷட்டர்’ உடைந்தது.
இதனால் தண்ணீர் கதவணையில் இருந்து வீணாக வெளியேறியது. இதை குறைக்க மின்சாரம் தயாரிக்கும் மதகு மூலமாக 1,500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த அணை பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று முன்தினம் இரவு வலைகளை போட்டிருந்தார்கள். ஷட்டர் உடைந்து தண்ணீர் வெளியேறியதால் அந்த வலைகளை தண்ணீர் அடித்து சென்றது. ‘ஷட்டர்’ உடைந்துள்ளதால் கதவணையில் தண்ணீர் தேங்காமல் அப்படியே வெளியேறுகிறது.
எனவே அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுத்து ‘ஷட்டர்’களின் பழுதுகளை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Tags :
Next Story