பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு


பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க முதல் அமைச்சர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Dec 2017 7:40 AM IST (Updated: 10 Dec 2017 7:40 AM IST)
t-max-icont-min-icon

முதல் அமைச்சர் உத்தரவின்படி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

மதுரை,

வைகை அணையின் நீர்மட்டம் 53.02 அடியாக உள்ளது.  அணையில் நீர் இருப்பு 2,418 மில்லியன் கனஅடியாக உள்ளது.  அணைக்கு நீர் வரத்து 1,082 கனஅடியாக உள்ளது.

முதல் அமைச்சர் பழனிசாமி, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவிட்டுள்ளார்.  இதனால் அணையில் இருந்து நீர் திறப்பு விநாடிக்கு 2,860 கன அடியில் இருந்து 3,580 கன அடியாக உயர்த்தப்பட்டு உள்ளது.


Next Story