லட்சத்தீவு அருகில் 4 கவிழ்ந்த படகுகள் கண்டுபிடிப்பு பாதுகாப்புத்துறை அறிவிப்பு


லட்சத்தீவு அருகில் 4 கவிழ்ந்த படகுகள் கண்டுபிடிப்பு பாதுகாப்புத்துறை அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Dec 2017 11:10 PM IST (Updated: 10 Dec 2017 11:09 PM IST)
t-max-icont-min-icon

ஒகி புயல் காரணமாக கடலில் சிக்கி தவிப்பவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

சென்னை, 

பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஒகி புயல் காரணமாக கடலில் சிக்கி தவிப்பவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. லட்சத்தீவு பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, புதிய மங்களூரில் இருந்து 342 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டு இருந்த தமிழகத்தைச் சேர்ந்த மில்கியாஸ் மற்றும் பிலாக்சியா ஆகிய 2 மீன்பிடி படகுகள் மீட்கப்பட்டன.

அதில் உள்ள மீனவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு அருகில் உள்ள துறைமுகத்துக்கு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டனர். அதேபோல் கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து 396 கிலோ மீட்டர் மேற்கே ‘ஆனி’ என்ற படகு கவிழ்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறி எதுவும் இல்லை. அதேபோல் ‘ஏவிஎம் இபி துரை’ என்ற நீல நிற படகு ஒன்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நிலையில் கவிழ்ந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்துவருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story