தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்க கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, புயலாக மாறி வட தமிழகத்தை தாக்கும் என்றும், இதனால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.
ஆனால் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, காற்றின் சுழற்சி காரணமாக ஆந்திரா மற்றும் ஒடிசா கடல் பகுதியை நோக்கி நகர்ந்து சென்றதால் வட தமிழகத்திற்கு புயல் ஆபத்து நீங்கியது.
இந்த நிலையில் கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் தற்போது வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாகவும், இதன் காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-
கன்னியாகுமரியை ஒட்டிய கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
வட தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும். மழை பெய்ய வாய்ப்பு குறைவு. சென்னையை பொறுத்தமட்டில் வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும். நகரில் பரவலாக பனிப்பொழிவு இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Tags :
Next Story