பணப்பட்டுவாடா புகார் எதிரொலி: ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரம்
பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை,
பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி பெறாமல் தொகுதியில் வலம் வந்த 50 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே, பணப்பட்டுவாடா புகாரால் இந்தத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் நடக்க இருக்கிறது. எனவே, இந்த முறை சர்ச்சை எதுவும் இல்லாமல் தேர்தலை முறையாக நடத்திவிட வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
வேட்புமனு தாக்கல் நடைபெற்றபோது, தேர்தல் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அவர் அதிரடியாக மாற்றப்பட்டார். தற்போது, புதிய தேர்தல் அதிகாரியாக பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை 4 மணியளவில் அவர் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க 1,800 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுவரை 2 கம்பெனியை சேர்ந்த 272 துணை ராணுவத்தினர் தொகுதிக்குள் வந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் இன்னும் ஓரிரு நாளில் வர இருக்கின்றனர்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் தொகுதியில் தற்போது பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் அனைவரும் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கு மத்தியில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகவும், உரிய அனுமதி இல்லாமல் வெளியூர் வாகனங்கள் தொகுதியில் வலம் வருவதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில், உரிய அனுமதி இல்லாத வாகனங்களை தொகுதிக்குள் அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டார். இதையடுத்து, ஆர்.கே.நகர் தொகுதிக்குள் நுழையும் 6 எல்லைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. துணை ராணுவத்தினர் உதவியுடன் போலீசார் வாகனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெளியூர் வாகனங்கள் என்றால், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்ற பாஸ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கின்றனர்.
தேர்தல் ஆணைய அனுமதி இல்லாமல் தொகுதிக்குள் வலம் வந்த 12 வாகனங்கள் நேற்று முன்தினம் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், நேற்றும் 38 வாகனங்கள் சிக்கின. இதுவரை சிக்கியுள்ள 50 வாகனங்களும் அ.தி.மு.க., தி.மு.க., டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 8 அதிகாரிகளும் தொகுதி முழுவதும் சுற்றி வந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, தேர்தல் விதிமீறல் தொடர்பாக 148 புகார்கள் வந்துள்ளன. அதுதொடர்பாக, 15 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரொக்கப் பணமும் ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொகுதி முழுவதும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மொத்தம் 284 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ரகசியமாகவும் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்படுகிறது.

Related Tags :
Next Story