பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை” என்றும், “1-1-2017 வரை மத்திய அரசின் எந்தத் துறையிலும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை” என்றும் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்துள்ள செய்தி, சமூகநீதியில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் பேரதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில் 35-க்கு 24 அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து 17 சதவீதம் பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள். ‘பி’ பிரிவு ஊழியர்கள் 14 சதவீதம், ‘சி’ பிரிவு ஊழியர்கள் 11 சதவீதம் ‘டி’ பிரிவு ஊழியர்கள் 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே நடைபெற்றுள்ள நியமனங்கள் மூலம் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்தும், நீண்ட காலமாகக் கிடப்பில் இருந்துவந்த 27 சதவீத இடஒதுக்கீட்டுக் கொள்கை, தலைவர் கருணாநிதியின் தொய்வில்லாத் தொடர்முயற்சியின் காரணமாக, வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது எனினும், மத்திய அரசு அலுவலகங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் வலுவிழக்கச் செய்யும் தீவிர முயற்சிகளில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கியிருப்பதும், மாநிலங்களில் உள்ள ஆணையங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் செயல்படத் துடிப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. மண்டல் கமிஷன் தலைவராக இருந்த பி.பி. மண்டல், “ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்ற சட்டபூர்வமான உரிமையும் விருப்பமும் இருக்கிறது” என்று குறிப்பிட்டுவிட்டு, “பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது மற்றவர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தலாம். ஆனால் அந்த வயிற்றெரிச்சல் சமூக சீர்திருத்ததை தடை செய்யும் “வீட்டோ” அதிகாரமாக இருக்க அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டுத்தான் “27 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று பரிந்துரைத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆகவே, மத்திய அரசின் அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிட்டு, “சிறப்பு நேர்வுகள்” மூலம் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும், அரசியல் சட்ட அமைப்புகளிலும் இடஒதுக்கீட்டை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தீவிர நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
52 சதவீதத்திற்கும் மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு போதாது என்று மண்டல் கமிஷன் அறிக்கையிலேயே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, அதற்கு பாராளுமன்றத்தின் மூலம் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கிட பா.ஜ.க. அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story