‘ஆர்.கே.நகர் தொகுதியை ஏலம் விட்டுவிடலாம்’ பா.ஜ.க. வேட்பாளர் ஆவேசம்
பணப்பட்டுவாடாவை தடுக்க முடியாவிட்டால், ஆர்.கே.நகர் தொகுதியை ஏலம் விட்டுவிடலாம் என்று பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் ஆவேசமாக பேசினார்.
சென்னை,
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள நேதாஜிநகர் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜனை ஆதரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருடன் வர்த்தகர் அணி செயலாளர் ராஜா, பா.ஜ.க. நிர்வாகிகள் பிரகாஷ், ஏ.என்.எஸ்.பிரசாத் மற்றும் மருத்துவர் அணியை சேர்ந்த ஏராளமான டாக்டர்களும் ஏராளமானோர் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதேபகுதியில் உள்ள மார்க்கெட் வியாபாரிகளிடம் தாமரை சின்னத்தில் வாக்குகளை சேகரித்தனர். அப்போது வாக்காளர்கள் மத்தியில் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
ஆர்.கே.நகரில் பா.ஜ.க.வுக்கு வாக்களித்து மாற்றத்தை கொண்டுவந்தால் லேடியின் (ஜெயலலிதா) பார்வையில் இருந்த இந்த தொகுதி, பிரதமர் மோடியின் நேரடி கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும். இந்த தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் இதுவரை குழந்தை பெறாத தாய்க்கு ஒரு குழந்தை கிடைத்தால் எவ்வளவு அபூர்வமாக பார்த்துக்கொள்வாரோ, அதேபோல இத்தொகுதியை பார்த்துக்கொள்வார்.
இங்கு குக்கரில் எதுவும் வேகப்போவது கிடையாது. உதயசூரியன் எத்தனை முறை உதித்தாலும் ஆர்.கே.நகர் மக்களின் வாழ்க்கை உதிக்கப்போவது இல்லை. இலைகள் துளிர்த்தாலும் மக்களின் வாழ்க்கை துளிர்க்க போவதில்லை. ஆர்.கே.நகர் தொகுதி மக்களின் வாழ்க்கை மலரவேண்டும் என்றால் தாமரை மலர்ந்தே தீரவேண்டும். எனவே தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேட்பாளர் கரு.நாகராஜன் பேசுகையில், “ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடாவை கடுமையான நடவடிக்கை மூலம் தடுக்க முடிந்தால் தேர்தல் நடத்தலாம். இல்லையென்றால் பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ, அவர்களுக்கு ஏலம் விட்டுவிடலாம்”, என்றார்.

Related Tags :
Next Story