ஆர்.கே.நகர் தொகுதியில் மீண்டும் பண மழை அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு வினியோகம்
ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு மீண்டும் அரசியல் கட்சியினர் பணம் வினியோகிக்க தொடங்கி இருப்பது, தேர்தல் அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை,
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் 12-ந் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்ட புகார் எதிரொலியாக, வாக்குப்பதிவுக்கு 2 நாட்களே இருந்த நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
7 மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கலும் நிறைவடைந்துள்ளது. வரும் 21-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், தற்போது தொகுதி முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
பிரசாரம் ஒரு புறம் நடந்தாலும், மற்றொரு புறம் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கும் பணியிலும் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2 அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் தரப்பிலும், ஒவ்வொரு வீட்டிலும் வாக்காளர்கள் எத்தனை பேர் என்பதை வெளிப்படையாகவே கணக்கெடுத்து வருகின்றனர்.
கணக்கெடுத்த தெருக்களில் உள்ள வீடுகளுக்கு ரெயில் டிக்கெட் அளவிலான துண்டு சீட்டில், எத்தனை ஓட்டுகள் இருக்கிறது என்பதை எழுதிக்கொடுத்து, அதை தொகுதிக்கு வெளியே குறிப்பிட்ட இடத்தில் கொண்டு கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு ரகசியமாக கூறிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பணப்பட்டுவாடா பணியும் கடந்த சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் இருந்தால், அரசியல்வாதி என்பது தெரிந்துவிடும் என்பதால், பணம் வினியோகிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், சாதாரண உடையிலேயே மக்களோடு மக்களாக வலம் வருவதாக சொல்லப்படுகிறது.
ஒரு ஓட்டுக்கு சுயேச்சை வேட்பாளர் தரப்பில் ரூ.8 ஆயிரமும், வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ள கட்சி தரப்பில் ரூ.5 ஆயிரமும், வெற்றியை தட்டிப் பறித்துவிட வேண்டும் என்ற உத்வேகத்தில் உள்ள கட்சி தரப்பில் ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக, தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும், தெருவுக்கும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே, பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில், இப்போது மீண்டும் பணம் வினியோகிக்கும் பணி தொடங்கியிருப்பது தேர்தல் அதிகாரிகளுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. தொகுதிக்குள் நுழையும் வாகனங்களை ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆனாலும், ரூ.5 லட்சம் அளவிலேயே பணம் சிக்கியுள்ளது.
அப்படி இருக்கும்போது, எப்படி வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்படுகிறது என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. என்றாலும், முன்னெச்சரிக்கையாக தேர்தல் அறிவிக்கப்படும் முன்பே அரசியல் கட்சியினர் தொகுதிக்குள் மொத்தமாக பணத்தை கொண்டு சென்று பதுக்கி வைத்துவிட்டு, தற்போது அதை வினியோகித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால், வாகனச் சோதனையில் பெரிய அளவில் பணம் சிக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிகிறது.
ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பணி ஒரு புறம் சுறுசுறுப்பாக நடந்தாலும், மற்றொரு புறம் வேட்பாளருடன் வாக்குகேட்டு செல்பவர்களுக்கும் ரூ.1,000 வரை பணம் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேபோல், வேட்பாளர்களை வரவேற்று வீட்டுக்கு முன்னால் கோலம் போட்டாலும், வேட்பாளரை ஆரத்தி எடுத்தாலும், வீட்டின் மாடியில் நின்று கொண்டு வேட்பாளர் மீது பூ தூவினாலும் பணம் கொடுக்கப்படுகிறது. மொத்தத்தில், ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போது பண மழை கொட்டத் தொடங்கியிருக்கிறது. வாக்காளர்களும் பண மழையில் நனைந்து வருகின்றனர்.

Related Tags :
Next Story