ஆர்.கே.நகர் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெறும் - ஸ்டாலின் பேச்சு
ஆர்.கே.நகர் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெறும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
ஆர்.கே.நகரில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
ஆர்.கே.நகர் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு திமுக வெற்றி பெறும். தேர்தலை கடந்தும் கூட்டணி தொடரும். ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்திற்கு, முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவை அழைத்து விசாரிக்க முடியுமா? தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு தொடர்ந்தால், திமுகவின் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.மீனவர்களுக்காக கூட்டணி கட்சிகளுடன் இணைந்து திமுக போராட்டம் நடத்தும்.
இவ்வாறு அவர் பேசினார்.
13 ஆண்டுகளுக்கு பின் ஒரே மேடையில் ஸ்டாலினுடன், வைகோவும் ஆர் கே நகரில் இணைந்து பிரசாரம் மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story