‘இப்படை வெல்லும்’ படத்தை வெளியிட்டதாக இணையதளம் மீது வழக்குப்பதிவு
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ தமிழ் படம் கடந்த 9–ந் தேதி வெளியானது.
சென்னை,
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘இப்படை வெல்லும்’ தமிழ் படம் கடந்த 9–ந் தேதி வெளியானது. இந்த படத்தை தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக, சி.பி.சி.ஐ.டி. அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் சட்டபூர்வ நடவடிக்கை குழுவின் தலைவர் ராஜசேகரன் என்பவர் இந்த புகார் மனுவை கொடுத்தார்.
அந்த புகார் அடிப்படையில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Related Tags :
Next Story