இடைத்தேர்தல் பாதுகாப்பு: ஆர்.கே.நகருக்கு துணை ராணுவம் வருகை


இடைத்தேர்தல் பாதுகாப்பு: ஆர்.கே.நகருக்கு துணை ராணுவம் வருகை
x
தினத்தந்தி 12 Dec 2017 1:38 AM IST (Updated: 12 Dec 2017 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதி பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசிடம் 15 கம்பெனி (1800 வீரர்கள்) துணை ராணுவபடை வீரர்கள் கேட்கப்பட்டது.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதி பாதுகாப்பு பணிக்காக மத்திய அரசிடம் 15 கம்பெனி (1800 வீரர்கள்) துணை ராணுவபடை வீரர்கள் கேட்கப்பட்டது. பொதுவாக சட்டசபை தேர்தலின் போது பதற்றமான தொகுதியில் 3 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் தான் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்.

ஆனால் இதுவரை இல்லாத அளவிற்கு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 15 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தற்போது 5 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட வந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் 10 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணிக்காக வர உள்ளனர். 15 கம்பெனி வீரர்களும் வந்தவுடன் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீரர்கள் கொடி அணிவகுப்பில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களை தங்கவைப்பதற்காக இதுவரை 9 சமூக நலக்கூடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில சமூக நலக்கூடங்களை வாடகைக்கு கேட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Next Story