கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட தஷ்வந்த் மீது நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தாக்குதல்


கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட தஷ்வந்த் மீது நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தாக்குதல்
x
தினத்தந்தி 13 Dec 2017 1:01 PM IST (Updated: 13 Dec 2017 1:01 PM IST)
t-max-icont-min-icon

கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட தஷ்வந்த் மீது நீதிமன்ற வளாகத்தில் பெண்கள் தாக்குதல் தாக்குதல் நடத்தினர்

சென்னை

ஹாசினி கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் மீது பொது மக்கள் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.  தாயை கொன்ற வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறுமி ஹாசினி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த வாரம் ஆஜராகாத காரணத்தினால் தஷ்வந்திற்கு செங்கல்பட்டு கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து புழல் சிறையிலிருந்து அவரை செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். 

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தஷ்வந்த் மீது பெண்கள் தாக்குதல் நடத்தினர் .  அவரைச் செருப்பால் அடித்தனர். இதனையடுத்து போலீசார் தஷ்வந்தை மீட்டு கோர்ட்டிற்குள் அழைத்து சென்றனர்.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்காக ஆஜராகி வாதாடி வந்த வழக்கறிஞர் விஜயகுமார் விலகினார். தனது வழக்கில் தானே வாதாட இருப்பதாக தஷ்வந்த் நீதிமன்றத்தில் பதில் தெரிவித்துள்ளார்

செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த், தமக்கு தண்டனை வழங்குமாறு நீதிபதி வேல்முருகனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜராக வரும்போதே தம் மீது மாதர் சங்கத்தினர் தாக்குதல் நடத்தினர் என்று தஷ்வந்த் கூறினார். 

Next Story