ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம்-தமிழக அரசு


ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட  காவல் ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம்-தமிழக அரசு
x
தினத்தந்தி 13 Dec 2017 3:06 PM IST (Updated: 13 Dec 2017 3:51 PM IST)
t-max-icont-min-icon

ராஜஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்க்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.

சென்னை

கொள்ளையர்களால் சுட்டுகொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டி குடும்பத்திற்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர்  பெரியபாண்டியன் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறிய  பின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர்  கூறியதாவது:-

பிரேத பரிசோதனைக்குப் பின் பெரியபாண்டியன் உடல், சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அரசு சார்பில் இறுதி சடங்கு நடைபெறும். பெரியபாண்டியன் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என கூறினார்.

இந்த நிலையில்  ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட  காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி நிவாரணம் வழங்கப்படும்  என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

ராஜஸ்தானில் சுட்டு கொல்லப்பட்ட  காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் குடும்பத்திற்கு ரூ.1கோடி நிவாரணம் வழங்கவும், பெரிய பாண்டியனின் 2 மகன்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்.  காயம் அடைந்த  காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம்  வழங்கவும் அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

Next Story