திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து ஒரு பெண் பலி 10 க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் பிரகார மண்டபம் இடிந்து ஒரு பெண் பலி 10 க்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளனர். மீட்கும் பணி தீவிரம்.
திருச்செந்தூர்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி குகைக்கு செல்லும் வழியில் உள்ள வெளி பிரகார மண்டபம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் ஒருவர் பலியானார். பிரகார மண்டப இடிபாடுகளில் 10-க்கும் மேற்பட்டோர் பக்தர்கள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சமடைந்துள்ளனர். இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்
அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமசத்திரம் திருச்செந்தூர் விரைந்து உள்ளார்.
Related Tags :
Next Story