உடல்நலம் குன்றியதால் ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை-கங்கை அமரன்
உடல்நலம் குன்றியதால் ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை என கங்கை அமரன் கூறியுள்ளார்.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வருகிற 21–ந் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் என்.மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் பாஜகவின் கரு.நாகராஜனும் போட்டியிடுகிறார்கள். இதனால் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கங்கை அமரன் கூறியதாவது:
யார் நல்லது செய்வார்கள் என யோசித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெறுகிறது. இந்த முறையும் ஆர்.கே.நகரில் தேர்தல் நடக்காவிட்டால் நல்லது தான். உடல்நலம் குன்றியதால் ஆர்.கே.நகரில் போட்டியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story