பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி மட்டுமே-திருநாவுக்கரசர்


பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி மட்டுமே-திருநாவுக்கரசர்
x
தினத்தந்தி 16 Dec 2017 10:46 AM (Updated: 16 Dec 2017 10:46 AM)
t-max-icont-min-icon

பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி மட்டுமே என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று  முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் திருநாவுக்கரசர் செய்தியார்களிடம் கூறியதாவது:

சவால்கள் நிறைந்த கட்டத்தில் காங். தலைவராக ராகுல் பொறுப்பேற்றுள்ளார். பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி மட்டுமே. அனைத்து கட்சித்தலைவர்களையும் அழைத்து ராகுலுக்கு பாராட்டு விழா நடத்தப்படும். ஜெயலலிதா மரணம் குறித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story