ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா: தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்


ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா:  தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார்
x
தினத்தந்தி 16 Dec 2017 6:48 PM IST (Updated: 16 Dec 2017 6:48 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க. புகார் செய்துள்ளது.

சென்னை,

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில், ஆளும் அ.தி.மு.க., எதிர்க்கட்சியான தி.மு.க., பாரதீய ஜனதா உள்ளிட்ட பெரிய கட்சிகள் போட்டியிடுகின்றன.  சுயேட்சை வேட்பாளராக டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார்.  தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆர்.கே. நகரில் தொகுதி மக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் வாக்காளர் ஒருவருக்கு ரூ.6 ஆயிரம் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது என தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார் தெரிவித்துள்ளது.

இதுபற்றி தேர்தல் சிறப்பு அதிகாரி பத்ராவிடம் தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதி புகார் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. கொறடா சக்கரபாணி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Next Story