தமிழகத்தில் கூடுதலாக 9 ராணுவ கேன்டீன்கள் திறக்கப்படும்


தமிழகத்தில் கூடுதலாக 9 ராணுவ கேன்டீன்கள் திறக்கப்படும்
x
தினத்தந்தி 17 Dec 2017 4:30 AM IST (Updated: 17 Dec 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கூடுதலாக 9 ராணுவ கேன்டீன்கள் திறக்கப்படும் என தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே.ஆனந்த் தெரிவித்தார்.

சென்னை,

பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971–ம் ஆண்டு நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16–ந்தேதி நாடு முழுவதும் ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் வெற்றி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

அதன்படி சென்னை காமராஜர் சாலையில் உள்ள போர் நினைவு சின்னத்தில் இந்த நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதனால் போர் நினைவு சின்னம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே.ஆனந்த் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதேபோல் தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், தாம்பரம் விமானப்படை தலைமை அதிகாரி எஸ்.ஸ்ரீனிவாஸ், கிழக்கு கடலோர காவல்படை டி.ஐ.ஜி, அலி மத்தூர் மற்றும் 1971–ம் ஆண்டு நடந்த போரில் கலந்து கொண்ட ராணுவ வீரர்கள் மற்றும் போரில் வீரமரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

போரில் வீரமரணமடைந்த மற்றும் காயமடைந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பங்களுக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. லலிதா அலெக்சாண்டர், கிரேஸ் செபஸ்டியன், செல்வம் மற்றும் ராஜகோபாலன் உள்ளிட்ட 5 பேருக்கு தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஆர்.கே.ஆனந்த் நிதி வழங்கினார்.

ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுளுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவத்தினரின் குடும்பத்தினர் பயனடையும் வகையில் ராணுவ கேன்டீன்கள் மூலம் சலுகை கட்டணத்தில் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கேன்டீன்கள் அதிக தூரத்தில் இருப்பதாக கூறப்பட்டதால் தமிழகத்தில் புதிதாக 9 கேன்டீன்கள் விரைவில் திறக்கப்பட உள்ளது. கூடுதலாக 12 கேன்டீன்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் ராணுவ தலைமைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கடந்த 1959–ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்தேன். தொடர்ந்து 1971–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் கலந்து கொண்டேன். இந்தோ–சீனா போர் மற்றும் கார்கில் போரிலும் கலந்து கொண்டு 2000–ம் ஆண்டு ஓய்வு பெற்றேன். ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல வீரர்கள் பணியாற்றி வந்தாலும் அதிகாரிகளாக ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். ராணுவத்தில் அதிகாரிகளாக பணியாற்ற தமிழ்நாட்டில் இருந்து பலர் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

1971–ம் ஆண்டு நடந்த போரில் ஐ.என்.எஸ்.குக்ரி கப்பலில், திருச்சி, லால்குடி, புதுஉத்தமனூரைச் சேர்ந்த கடற்படை வீரர் ஏ.செபஸ்டின் பணியாற்றினார். அவர் இந்த போரில் வீரமரணமடைந்தார். அவருடைய மனைவி கிரேஷி செபஸ்டின் கூறியதாவது:–

என்னுடைய கணவர் 24 வயதில் போரில் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்தார். வயது கைக்குழந்தையுடன் எங்களை விட்டு அவர் சென்றார். நாட்டுக்காக சேவையாற்றி அவர் வீரமரணம் அடைந்து உள்ளார். ராணுவத்தில் இணைந்து நம்நாட்டை காக்க அனைவரும் முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story