விரைவில் வரவுள்ள பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மு.க. ஸ்டாலின்
விரைவில் வரவுள்ள பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
ஆர்.கே.நகர் காசிமேடு வீரராகவன் சாலையில் திமுக வேட்பாளர் மருதுகணேஷை ஆதரித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது என்றால் அப்போது பன்னீர்செல்வம், பழனிசாமி என்ன செய்தார்கள்? விரைவில் வரவுள்ள பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டம் தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்.
ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது. கோடி கோடியாக கொட்டிக்கொடுத்தாலும், உருண்டு புரண்டாலும் ஆர்.கே.நகரில் அதிமுக டெபாசிட் பெறாது. ஆர்.கே.நகரில் தேர்தலை சந்திக்க எந்த நிலையிலும் திமுக தயார்; தேர்தலை நிறுத்த வேண்டும் என கூறவில்லை.
பணப்பட்டுவாடா பற்றி வருமானவரித்துறை தகவல் கூறியதால் ஏற்கனவே தேர்தல் நிறுத்தப்பட்டது. அதிமுகவில் ஈபிஎஸ், ஓபிஎஸ், சசிகலா என மூன்று குழல் துப்பாக்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story