போலீஸ் இணை கமி‌ஷனர் திடீர் மாற்றம் தேர்தல் ஆணையம் உத்தரவு


போலீஸ் இணை கமி‌ஷனர் திடீர் மாற்றம் தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 18 Dec 2017 10:35 PM IST (Updated: 18 Dec 2017 10:34 PM IST)
t-max-icont-min-icon

வடசென்னை போலீஸ் இணை கமி‌ஷனர் சுதாகர் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்படவேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சென்னை, 

தென்சென்னை போக்குவரத்து இணை கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, சுதாகர் பணியிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்ட அறிக்கையை (செவ்வாய்க்கிழமை) பகல் 1 மணிக்குள் தெரிவிக்கவேண்டும்.

மேற்கண்ட உத்தரவை இந்திய தேர்தல் ஆணையம் சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ளது.


Next Story