குஜராத்தில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் வெற்றி: ‘நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்து இருப்பதை காட்டுகிறது’ திருநாவுக்கரசர் கருத்து


குஜராத்தில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் வெற்றி: ‘நரேந்திர மோடியின் செல்வாக்கு குறைந்து இருப்பதை காட்டுகிறது’ திருநாவுக்கரசர் கருத்து
x
தினத்தந்தி 19 Dec 2017 1:15 AM IST (Updated: 18 Dec 2017 10:48 PM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் கூடுதல் இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருப்பது, பிரதமர் நரேந்திரமோடியின் செல்வாக்கு குறைந்து இருப்பதை காட்டுகிறது என்று சு.திருநாவுக்கரசர் கூறினார்.

சென்னை,

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறியதாவது:–


குஜராத் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலம். இந்தியாவின் சிறந்த மாநிலம். அதானி போன்றவர்கள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலம். காங்கிரசுக்கு டெபாசிட் கூட கிடைக்காது என்றார்கள். சாம, பேத, தான, தண்ட யுக்தி அனைத்தையும் கையாண்டார்கள்.

அப்படி இருந்தாலும் பா.ஜனதா பல இடங்களை இழந்து இருப்பதும், காங்கிரஸ் கூடுதலான இடங்களை கைப்பற்றி இருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மோடியின் செல்வாக்கு குறைந்து இருப்பதையே தேர்தல் முடிவு எடுத்துக் காட்டுகிறது.

இமாச்சல பிரதேசம் மிகச்சிறிய மாநிலம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. எனவே, ஆட்சியில் இருக்கும் கட்சி மீது அதிருப்தி ஏற்படும். அந்த வகையில் இமாச்சல பிரதேச முடிவு அமைந்துள்ளது. ஆனால் மக்கள் எதிர்பார்ப்பு குஜராத் மீதுதான் இருந்தது.

அங்கு காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள ஏற்றமும், முன்னேற்றமும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதிக்கம் நிறைந்த மாநிலம். கொஞ்சம் கொஞ்சமாக விடுதலை பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story