கவர்னருக்கு எதிராக அரசியல் கட்சிகள் போராட்டம்: தமிழக அரசு கவர்னருடன் ஆலோசித்து முடிவு காண வேண்டும் சரத்குமார் கோரிக்கை
தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றது முதல், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருவது பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
சென்னை,
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தின் கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பேற்றது முதல், அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து ஆய்வுப் பணிகள் மேற்கொண்டு வருவது பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. அதன் அடுத்தகட்டமாக, சில அரசியல் கட்சிகள் அவர் செல்லும் இடங்களில் கருப்புக்கொடி காட்டுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
தொடர்ந்து கவர்னரின் ஆய்வுப் பணிகளும், அதற்கு எதிரான அரசியல் போராட்டங்களும் நடைபெற்று வருவது, மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பைக் குறைப்பதாகும். தமிழக அரசு உடனடியாக இதுபோன்ற குழப்பநிலை நீடிப்பதை தவிர்க்கும் விதமாக, கவர்னருடன் ஆலோசித்து உடனடியாக முடிவு காண வேண்டும். கவர்னரும் இதுபோன்ற உரசல்களை தவிர்க்கும் விதமாகவும், அரசு நிர்வாகத்தில் குழப்பங்கள் ஏற்படாத வகையிலும் தனது நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story