தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர் ஆர்.கே.நகரில் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி


தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினர் ஆர்.கே.நகரில் பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் பேரணி
x
தினத்தந்தி 20 Dec 2017 4:15 AM IST (Updated: 20 Dec 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் தொண்டர்களோடு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று ‘தாமரை’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் தொதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் நேற்று காலை திறந்த ஜீப்பில் சென்று பிரசாரம் செய்தார். மதியம் பா.ஜ.க. தொண்டர்களோடு மோட்டார் சைக்கிளில் பேரணியாக சென்று ‘தாமரை’ சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் அருகில் தொடங்கிய மோட்டார் சைக்கிள் பேரணியை மோடி போன்று வேடமணிந்த ஒருவர் பா.ஜ.க. கொடியை அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் திறந்த வேன் மூலம் தொகுதி முழுவதும் உலா வந்தார்.

மோடி போன்று வேடமணிந்து சென்ற நபரை பார்த்து மற்ற கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் கை அசைத்தனர். பிரசாரத்தின்போது பா.ஜ.க. வேட்பாளர் கரு.நாகராஜன் பேசும்போது, ‘ஆர்.கே.நகர் தொகுதி சிங்கப்பூர் போன்று மாறுவதற்கு பா.ஜ.க.வுக்கு வாய்ப்பு தாருங்கள். பா.ஜ.க. வெற்றி பெற்றால் ஆர்.கே.நகர் தொகுதி பிரதமர் நரேந்திர மோடியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படும்.’ என்றார். 

Next Story