கடைசி நாளில் மதுசூதனன் நடந்து சென்று பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்


கடைசி நாளில் மதுசூதனன் நடந்து சென்று பிரசாரம் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்
x
தினத்தந்தி 19 Dec 2017 11:30 PM GMT (Updated: 19 Dec 2017 8:44 PM GMT)

ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் நடந்து சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை, 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனன் நடந்து சென்றபடி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். வயதான காலத்திலும், வீதி, வீதியாக நடந்து சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார்.

சென்னை கொருக்குப்பேட்டை சத்தியமூர்த்தி நகரில் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரோடு இணைந்து மதுசூதனன் பிரசாரம் செய்தார். அங்கு பிரசாரத்தை முடித்துவிட்டு மதுசூதனன் காரில் புறப்பட்டார். அப்போது வழிநெடுகிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் மதுசூதனன் அ.தி.மு.க. தொண்டர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளில் ஏறி புறப்பட்டு சென்றார். நேற்று மாலை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரில் தனது பிரசாரத்தை நிறைவு செய்தார்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று கன்னியாகுமரிக்கு சென்று விட்டதால், அமைச்சர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தொண்டர்கள் படையுடன் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தனர். 

Next Story