வீடியோ விவகாரம் வெற்றிவேல் மீது சட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார்


வீடியோ விவகாரம் வெற்றிவேல் மீது சட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 20 Dec 2017 1:10 PM IST (Updated: 20 Dec 2017 1:10 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ விவகாரம் தொடர்பாக வெற்றிவேல் மீது சட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை  தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

தற்போது இந்த வீடியோ குறித்த பலவேறு தகவல்கள் வெளியாகி வருகிறது.ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

ஆர்.கே. நகர் தேர்தலையொட்டி உள்நோக்கத்துடன் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது தேர்தல் விதி மீறல். வெற்றிவேல் மீது சட்ட நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும்.

பாதுகாப்பு விதியை மீறி ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோவை எடுத்தது யார்? வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் இல்லை.

இந்த  வீடியோ வெளியீடு  தேர்தலை மனதில் வைத்து, ஜெயலலிதாவின் புகழை சீர்குலைக்க நடந்த சதி ஆகும். வீடியோவை விசாரணை ஆணையத்தில் அளிக்காது ஏன்?

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது சசிகலா குடும்பம் பெரும் பிரச்சனையாக இருந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னரும் அதையே செய்கிறார்கள். 

ஜெயலலிதாவின் புகழை சீர்குலைப்பதற்காக சசிகலா குடும்பத்தினர் செய்த சதியை மக்கள் ஏற்க மாட்டார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story