வீடியோ வெளியீடு வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் - கிருஷ்ணபிரியா


வீடியோ வெளியீடு வெற்றிவேலின்  கீழ்த்தரமான செயல் - கிருஷ்ணபிரியா
x
தினத்தந்தி 20 Dec 2017 1:52 PM IST (Updated: 20 Dec 2017 1:52 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டது டிடிவி தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின் கீழ்த்தரமான செயல் என இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா கூறி உள்ளார்.

சென்னை

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோவை  தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டார்.

தற்போது இந்த வீடியோ குறித்த பலவேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ வெளியிட்டது விதிமீறல் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்டது டிடிவி தினகரனுடன் இருக்கும் வெற்றிவேலின்  கீழ்த்தரமான செயல் என  இளவரசியின் மகளும் விவேக்கின் சகோதரியுமான  கிருஷ்ணபிரியா தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார்.


Next Story