திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு


திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 20 Dec 2017 10:56 PM IST (Updated: 20 Dec 2017 10:56 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., பி.எச்டி. படித்தவர்களுக்கு அரசு பணிகள், பதவி உயர்வு வழங்கலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை, 

இதுகுறித்து தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

10–ம் வகுப்பு, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story