ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி 41.6 சதவீத வாக்குகள் பதிவு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நண்பகல் 1 மணி வரை 41.6 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.
ஆர்.கே.நகர்,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
வாக்காளர்கள் காலையிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்கு சாவடிகளுக்கு முன் வரிசையாக நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். இந்த வாக்கு பதிவு மாலை 5 மணிவரை நடைபெறும். தேர்தலுக்காக 258 வாக்கு சாவடிகளில் வாக்கு பதிவு நடைபெறுகிறது.
வாக்கு பதிவு பற்றி ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தகவல் தெரிவிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில், 9 மணியளவில் ஆர்.கே. நகரில் 7.32 சதவீத வாக்குகள் பதிவு ஆகியுள்ளன என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், 11 மணியளவில் 24.01 சதவீத வாக்குகளும், 12 மணியளவில் 26.05 சதவீத வாக்குகளும் மற்றும் நண்பகல் 1 மணி நிலவரப்படி 41.6 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
Related Tags :
Next Story