‘2ஜி வழக்கு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது ராஜாத்தி அம்மாள்
‘2ஜி வழக்கு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது’ மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கூறினார்.
ஆலந்தூர்,
2ஜி வழக்கில் தி.மு.க. எம்.பி. கனிமொழி, முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா உள்ளிட்டோரை விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்காக டெல்லி சென்றுவிட்டு விமானம் மூலம் சென்னை திரும்பி வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘2ஜி வழக்கின் தீர்ப்பு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது. மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர்’’ என்றார்.
Related Tags :
Next Story