ஆர்.கே.நகரில் தேர்தல்: சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் ராணிமேரி கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன
ஆர்.கே.நகரில் தேர்தல் சீலிடப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான ராணிமேரி கல்லூரிக்கு கொண்டுவரப்பட்டன.
சென்னை,
காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருதுகணேஷ், சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன், பா.ஜனதா சார்பில் கரு.நாகராஜன், நாம் தமிழர் சார்பில் கலைக்கோட்டுதயம் என 59 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். தொகுதியில் உள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக 51 மையங்களில் 258 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது.
வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வரிசையில் காத்திருந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 77.68% வாக்குகள் பதிவானது.
அதில் ஆண் வாக்காளர்கள் - 84,195 பேர், பெண் வாக்காளர்கள் - 92,862 பேர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் - 17 பேரும் வாக்களித்துள்ளனர் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் கூறியுள்ளார்.
இந்நிலையில் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ராணிமேரி கல்லூரிக்கு கொண்டு கொண்டுவரப்பட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் (24-ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. ராணிமேரி கல்லூரிக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story